தி.மு.க உருவானது ஏன்?

0 reviews  

Author: மலர்மன்னன்

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தி.மு.க உருவானது ஏன்?

 இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இதுபற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன்.’

- ஜூன் 19, 1949 விடுதலை இதழில் பெரியார்

‘ஹைதரபாத் நிஜாமுக்கு இருக்க வேண்டிய கவலை, ஆதீனகர்த்தர்-களுக்கு ஏற்பட வேண்டிய கவலை பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை. வாரிசு முறை எதற்கு? யார் செய்யும் ஏற்பாடு? எந்தக் காலத்து முறை? ஓர் இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? அல்லது நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா? திராவிடர் கழகம், அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்படி தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா?’

- ஜூலை 3, 1949 திராவிட நாடு இதழில் அண்ணா

தி.மு.க உருவானது ஏன்? - Product Reviews


No reviews available