தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு

தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு
ஹொரேஸ் பி.டேவிஸ் அவர்கள் எழுதியது. தமிழில்: மு.வசந்தகுமார் .
நடைமுறையில் சர்வதேச உறவுகளை அறநெறிப் படுத்துவதில் மார்க்சும் எங்கல்சும் நேரத்தை வீணாக்கவில்லை.ஒவ்வொரு சூழ்நிலையையும் அது தோன்றிய சூழலில் ஆய்வு செய்தனர். சோசலிசத்தையும் மனித குலத்தின் நனடமையையும் எது சிறந்த மறையில் மேல் எடுத்துச் செல்லும் என்று கருதினார்களோ அதன் அடிப்படையில் செயல் திட்டத்தை வகுத்தார்கள்.அதுதான் அவர்களுடைய இலக்குச் சட்டகம். உண்மையலி் அதுதான் அவர்களின் அறநெறிக் கோட்பாடு"."ஒரு தேசிய இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உண்மையாகவே போராடி வரும்வரை அது அறவியல் தன்மை கொண்டதாகவும் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.ஆனால் இன்றைய காலகட்டத்தில் தேசியம் அறவியல்தன்மை கொண்டதாக இருக்கவேண்டுமானால் அது கட்டாயம் முதலாளியத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக இருக்க வேண்டும். ரெஜிஸ் டெப்ரே மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியது போல தேசியம் கட்டாயம் புரட்சிகர சோசலித்தை உள்ளடக்கி இருக்கவேண்டும். சோசலிசம் கட்டாயம் புரட்சிகர தேசியத்தை உள்ளடக்கி இருக்கவேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்றைப் பற்றிச் சிந்திப்பது சாத்தியம் இல்லை".