தத்துவ ஞானம்

தத்துவ ஞானம்
மதம் ,உண்மையை முழுவதுமாகக் கொண்ட தத்துஞானக் கருத்துகளைக் சொல்வதாக மக்கள் முன்ப நம்பி வந்தார்கள். உலகப் போர்கள்களுக்கப் பிறகு மதவாதிகளுக்கு கொடுத்து வந்த கொடுத்து வந்த மரியாதையில் இருந்து சற்றே விலகித் தொடங்கினார்கள்.போர்க்காலங்களில் ,மதபோதனைகள் சொன்ன தர்ம நியாயங்களுக்கு எதிராக பல விஷயங்கள் நடந்ததே இதற்குக் காரணம்! நல்லது செய்தால் தல்லது நடக்கும் ! , கடவுளை நம்பு ,அவர் உன்னை கைவடைமாட்டார்! என்றெல்லாம் மதம் சொன்னது.ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை . ஹிட்லர் முசோலினி போன்ற சர்வதிகாரிளகளின் கைகளில் இப்பாவி மக்கள் மாட்டிக் கொண்டு அனுபவித்தார்கள்.நல்லவர்களை ,நம்பியவர்களைக் காப்பாற்ற கடவுள் வரவில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டார்கள். வாழ்வதற்கு எதுவுமே இல்லை என்று தற்காலிகமாக மனம் உடைந்து போனார்கள்.ஆனபலும் சிலர் ஏதோ ஒரு புதிய கருத்து வந்து தங்களுடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் அளிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.மதத்தைத் தபண்டி சிரர் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.இதுவரை ஒரு பேருண்மையைத் தேட பலர் முயன்றார்கள். பல ஆண்டங்களாக இந்தத் தேடல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.யாரை நம்புவது...எந்தப் பக்கம் சாய்வது...நம் சொந்தக் கருத்து சரியா...என்று எந்த முடிவிலும் நிலையாக நிற்காமல் பேருண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.