தாமஸ் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
தாமஸ் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
99% உழைப்பு, 1% மட்டும்தான் உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன் தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார். எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம்: ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது. சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை. எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு போனோகிராப் - பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார். இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார். தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி... ஏன், ஒரு தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உட்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?
தாமஸ் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Product Reviews
No reviews available