தலாய்லாமா விஞ்ஞானமும் பெளத்தமும்

தலாய்லாமா விஞ்ஞானமும் பெளத்தமும்
தமிழில் ஓ.ரா.ந.கிருஷ்ணன்தவத்திரு.தலாய் லாமா அவர்களின் The Universe In A Single Atom என்கிற ஆங்கில நூல் சர்வதேச அளவில் பெரும்புகழ் பெற்ற ஒரு அருமையான ஆராய்ச்சி நூலாகும். அது மொழிபெயர்க்கப்பட்டு இப்போது தமிழ்கூறும் நல்லுலகத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. அனுபவத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து காண்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ள விஞ்ஞானம் பெளத்தம் இரண்டிற்கும் இடையேயுள்ள பல ஒற்றுமைகளையும் ஒத்திசைவுகளையும் ஆராய்ந்து கூறும் இந்த நூல், விஞ்ஞானத்தின் குறைபாடுகளையும்,விஞ்ஞான ஆராயச்சிகள் அறநோக்கோடு மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்துவது மட்டுமின்றி பெளத்தம் விஞ்ஞானத்திலிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ள உண்மைகளையும் நடுநிலை கோணாமல் எடுத்துக் கூறுகின்றது. விஞ்ஞானத்தையும் தர்ம ஆன்மிகத்தையும் மனித வாழ்வின் இரண்டு இன்றியமையாத கூறுகளாகக் கருதும் தலாய் லாமா, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொண்டு துயரங்களிலிருந்த விடுபடுவதற்கு இப்போது காட்டப்படுவதற்கு மேலான ஒரு அறநெறியை நம் அனைவரையும் ஓரே மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக இணைக்கும் ஒரு நெறியை, அன்பும் கருணையும் பிறர் நலன் பேனும் பெருந்தகைமையும் இணைந்து உருவான ஒரு நெறியை வளர்க்கும் உயரிய குறிக்கோளோடு இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்.