தமிழ்மறை தந்த பன்னிருவர்

தமிழ்மறை தந்த பன்னிருவர்
ஆழ்வார்கள் -பக்தியில் ஆழ்ந்தவர்கள்.பகத்ர்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு ஒளிமையமான வாழ்வை காட்டி ஆன்ம தாகத்தை ஊட்ட ஒரு இயக்கத்தையே நடத்தி இருக்கின்றனர்.நம் நாட்டின் அறிவுப் பொக்கிஷமான 4வேதங்களையும் பாமர மக்களும் புரிந்து கொள்வதற்காக அழகுத் தமிழில் பிரபந்தங்களாக கொடுத்திருக்கின்றனர்.அப்படி அவர்கள் எந்த வகையில் வேதக்கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர்களுடைய வாழ்க்கை காலத்தில் செய்த புரட்சிகளும் இந்த நூலில் சுவைபட தரப்பட்டுள்ளன.தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியம் கண்ட பெரியாழ்வாரின் பாசுர அழகும் விளக்கங்களும் ... அரங்கனுக்கு மாலையிட்ட ஆண்டாளின் திருப்பாவை நாச்சியார் திருமொழியில் சொல்லப்பட்ட கதையும் உள்ளர்த்தமும் ... தொண்டர்குலமே தொழுகுலம் என வாழ்ந்த தொண்டரட்டிப் பொடியாரின் சுவாரஸ்யம் மிகுந்த வாழ்க்கை கதை... கொள்ளையடித்தும் அரஙக்ன் கோயிலை சீர்படுத்திய திருமங்கையாழ்வார் கதையும் பாசுர விளக்கங்களும் ...திவ்ய பிரபந்தங்கள் மக்களிடமிருந்து மறைந்து போன பின் அவற்றை தேடி தொகுத்த நாத முனிகளின் வாழ்க்கை... இந்த நூல் முழுவதும் இப்படி கதைகளும் பாசுர விளக்கங்களுமான அமைந்து பக்திப்பரவசத்தை தருகின்றன.