சூரியன் தகித்த நிறம்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
சூரியன் தகித்த நிறம்
தமிழ் மொழியின் பெரிய ஆளுமையான கவிஞர் பிரமிள் மொழிப்பெயர்த்த கவிதைகளின் தொகுப்பு இது. உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த நேரங்களில் தனக்குப் பிடித்த கவிதைகளைப் பிரமிள் மொழிப்பெயர்த்திருக்கிறார்.
இந்திய ரிக்வேதம்,உபநிஷம் தொடங்கி பாப்லோ நெருடா, எஸ்ரா பவுண்ட, பிரெக்ட், கலீல் கிப்ரான், ஜோஸப் பிராட்ஸ்கி முதலான பல இலக்கியத்தின் முக்கியமான கவிஞர்களின் வரிகளை நேர்த்தியாகவும் வாசிப்புச் சுலபத் தன்மையோடும் இனிமை சார்ந்த செறிவோடும் தமிழில் தந்துள்ளார்.
உலக இலக்கிய உச்சம் எனத்தக்க ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'பாதை' கவிதை இத்தொகுதியின் சிறப்பம்சம்.
பிரமிளுக்கு இயல்பாக அமைந்த கவித்துவத்தோடு அவரது ஆன்மீகத் தேடலும் வெளிப்படும் விதமாகக் கவிதைத் தேர்வுகள் அமைந்துள்ளதை வாசகர்கள் இத்தொகுப்பில் உணரலாம்.