சுமை தாங்கி
சுமை தாங்கி
பிரச்சினைக்குரிய கதைகளை விமர்சனங்களுக்கு ஆளாகும் முறையில் எழுதுகிறவன் என்று பேரெடுத்து விட்டவன்.இதனாலேயே என்னை அதாவது என் கதைகளை ரொம்பப் பேருக்குப் பிடிக்கும். ரெம்பப் பேருக்குப் பிடிக்காது.ஆனால் இரு சாராரும் என் கதைகளைப் படிப்பார்கள். பிடிக்கறது, பிடிக்கவில்லை என்பதைவி்ட எல்லோருமே படிக்கிறார்கள் என்பதுதான் முக்கயிம். வாழ்க்கையின் உண்மைகள் செய்திகளாக வருகிறபோது நமது சிறுமைகளின் விஸ்வரூபமாகத் தோற்றமளிக்கின்றன.வேடிக்கைக்குரிய விபரீதங்களாக மாறி வக்கரித்த ரசனைக்கு இலக்காகின்றன.அதுவே ஒரு கதை எழுதுகிறவனின் கைவண்ணத்தில் மனிதப் பெருமையின் மகா சமுத்திரமாய் விரிகிறது.ஊர் என்பது மரபும், மண்ணும் குளம் குட்டைகளும் அல்ல.. ஊர் என்றால் மனிதர்கள் என்று அர்த்தம் .அதனால்தான் என் கதைகளில் மண்வாடை அடிக்கிறதில்லை மனித நொடியே வீசுகிறது.
சுமை தாங்கி - Product Reviews
No reviews available