சுகப்பிரசவம் இனி ஈஸி!

சுகப்பிரசவம் இனி ஈஸி!
பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., (1975-1981) பட்டம் பெற்றவர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
தமிழின் பல்வேறு முன்னணி பத்திரிகைகளிலும் மருத்துவ கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். 47 மருத்துவ நூல்களும் எழுதியிருக்கிறார்.
இவருடைய மருத்துவ அறிவியல் தமிழ்ப் பணிக்காக, மத்திய அரசின் ‘ேதசிய அறிவியல் விருது’, தமிழக அரசின் சிறந்த நூல் விருது உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
‘நாட்டில் சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து, சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமாகின்றன’ என்று வரும் செய்திகள் கர்ப்பிணிகள் பலருக்கு அச்சமூட்டுகின்றன. இதுவே யூ டியூப் பார்த்து பிரசவம் செய்யும் அளவு மோசமான நிலையை உருவாக்கிவிடுகிறது.
இந்த நிலைமை மாறவேண்டும். எந்தப் பெண்ணுக்கும் பிரசவத்தில் தேவையில்லாத சிக்கல்கள் உருவாகக்கூடாது; அதற்குக் கர்ப்பம் மற்றும் பிரசவம் குறித்த அறிவார்ந்த புரிதல் பெண்களுக்கு இருந்தால்தான் சாத்தியம் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்த நூல்..