சுகப் பிரசவம்

சுகப் பிரசவம்
திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்!ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம், தாய்மை. கூட்டுக்குடும்ப காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அவளை வழி நடத்தவும் ஆலோசனை கூறவும் பெரியவர்கள் இருந்தனர். இப்போது நடப்பது தனிக்குடித்தன சாம்ராஜியம். அதனாலேயே கர்ப்பம் என்ற சந்தோஷமான விஷயம், பெண்களின் மனத்தில் சற்றே கிலியூட்டுகிற ஒன்றாக மாறிவிட்டது. காரணம், கர்ப்ப காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பல கேள்விகள். என்ன சாப்பிடலாம், என்ன உடுத்தலாம், எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, இது சரியா, அது சரியா - ஆயிரமாயிரம் சந்தேகங்கள்.கர்ப்பிணிகளுக்கு, குறிப்பாக முதன்முறையாக தாய் ஆகப்போகும் பெண்களுக்குப் பிரசவம் பற்றியும், தாய்மை பற்றியும், பிரசவத்துக்குப் பிறகு குழந்தையைப் பராமரிப்பது எப்படி என்பது பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. மேலும், கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் உடல்ரீதியான, மனரீதியான மாற்றங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்த சமயங்களில் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான தகவல்களுடன் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் மலடுநீக்கு இயல் சிறப்பு நிபுணர் மகேஸ்வரி ரவி.