ஸ்டீபன் ஹாக்கிங் (வாழ்வும் பணியும்)
ஸ்டீபன் ஹாக்கிங் (வாழ்வும் பணியும்)
ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாறும், அறிவியலும் முரண்பாடுகள் நிறைந்தனவாக இருக்கின்றன.
பொருட்கள் அவற்றின் தோற்றத்தைப் போல இருப்பதில்லை. ஒன்றாகச் சேர வேண்டிய பகுதிகள் ஒன்றாகச் சேர மறுக்கின்றன. தொடக்கங்களே முடிவுகளாக ஆகின்றன. கொடுமையான சூழல்கள் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்; புகழும் வெற்றியும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. இரண்டு மிகுந்த சிறப்பான வெற்றிகரமான அறிவியல் கோட்பாடுகளை ஒன்றாகச் சேர்க்கும்போது மடமையே மிஞ்சுகிறது. வெறுமையான வெளி வெறுமையானதாக இல்லை. கருந்துளைகள் கறுப்பாக இருப்பது இல்லை. அனைத்தையும் ஒரு விளக்கத்திற்குள் கொண்டு வரும் முயற்சி துண்டாகிப் போன காட்சியைத் தருகிறது. அதிர்ச்சியையும் இரக்கத்தையும் உண்டாக்கும் தோற்றமுடைய ஒருவர் காலம், வெளி ஆகியவற்றின் எல்லைகள் இருக்க வேண்டிய இடத்திற்கு நம்மை மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்கிறார்; ஆனால் அவை அங்கே இல்லை. இந்த அண்டவெளியைச் சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம், உண்மைநிலை குழப்பமானதாக, பிடிபடாததாக, சில வேளையில் அன்னியமாக இருக்கிறது. அதனை ஏற்பது எளிதில்லை. அதன் எதிர்காலத்தை முன்னறிவிக்கவும் முடியாது. இந்த அண்டவெளிக்கு அப்பால் பல வெளிகள் இருக்கக்கூடும். இருபதாம் நூற்றாண்டு வந்து போய்விட்டது. ஆனால் இன்னும் அனைத்திற்குமான கோட்பாட்டை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியானால் ஹாக்கிங்கின் . முன்னறிவிப்பு என்னவாயிற்று? எந்த அறிவியல் கோட்பாடும் உண்மையாகவே அனைத்தையும் விளக்க முடியுமா?
ஸ்டீபன் ஹாக்கிங் (வாழ்வும் பணியும்) - Product Reviews
No reviews available