சூரியயோதயம்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
சூரியயோதயம்
சுய இரக்கத்துடன் கண்ணீர் வடிக்கும் பெண்களாக அல்லாமல், சூழல் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு நடுவே இவர்கள் அவரவர் வழியில் கம்பீரமாக எழுந்து நின்று சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார்கள். சுண்டல் விற்கிற சிறுமியிலிருந்து கல்லூரிப் பேராசிரியர் வரை, தங்கள் வாழ்வின் அர்த்தம் தேடிப் பயணிக்கும் இப்பெண்கள் வாசக மனதில் பெருமூச்சையும் நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் உருவாக்குகிறார்கள். அடித்தட்டு மக்களின் மீது தோழர் ஹேமா கொள்ளும் பரிவும் நேசமும் அக்கறையும் ஒவ்வொரு கதையின் வண்ணமாகவும் வாசமாகவும் அமைந்து நம் மனங்களை நிறைக்கின்றன..பாரதிக்கு எழுதிய கடிதமும் செப்டம்பர் தினங்கள் பற்றிய கட்டுரையும் ஒரு கவிதையும் கூடுதல் பரிசாக நம் கைவந்து சேர்கின்றன.