சிவாஜி

சிவாஜி
ரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. தமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத பிரம்மாண்டம். எப்படிச் செய்தார்கள்? எப்படி முடிந்தது? இரண்டு வருடங்களும் படம் குறித்த சிறு செய்திகளுக்காகவும் புகைப்படங்களுக்காகவும் ரசிகர்கள் எப்படியெல்லாம் தவமிருந்தார்கள்! ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் வெளியானபோது எத்தனை வியப்படைந்தார்கள்! ஷங்கர் படத்தின் புகைப்படங்கள் கசிந்து வந்தது எப்படி? யாருக்கும் அப்போது தெரியாது. இப்போது தெரிந்துகொள்ள முடியும். முழு விவரமும் இந்நூலில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடந்த காலம் முழுதும் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், பங்கு பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்களின் நினைவுத்தொகுப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூலுக்காகவே ரஜினி அளித்திருக்கும் பிரத்தியேகமான பேட்டி!