சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம்

சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம்
ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களையும் தமிழ்ப் படைப்புகளையும் தமிழில் படைப்புகளை வெளிக் கொணர ஊர் ஊராகச் சுற்றி ஏடுகளைச் சேகரித்துத் தமிழ் மக்கள் அறிய, நூல்களாய் வெளிக் கொணர்ந்த உவே.சாமிநாதய்யர் போன்று. அவர் காலத்தில் வாழ்ந்த சி.கண்ணுசாமிப் பிள்ளையும் தம் சுய அனுபவத்தால் செய்முறையால் கற்றுணர்ந்து, அதனை அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் மூலிகைகளின் சிறப்பை, வளமையை, அதன் அறிவியல் நுட்பத்தை அச்சில் ஏற்றிப் பதிப்பித்து வழங்கினார்.
அவற்றில் உங்கள் கைகளில் தவழும் 'சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்' எனும் இந்நூல் 'மூலிகைக் குணப் பேரகராதி' என்றே சொல்ல வேண்டும். மூலிகைகளை அகர வரிசையாய்க் கொணர்ந்து அவற்றின் குணங்களையும், செயல் விளக்கங்களையும், வீரியங்களையும் பயன்படுத்தும் முறைகளையும், எந்தெந்த நோய்களுக்குப் பயனுடையது என்பதையும் விரிவாக, பேரகராதியாகத் தந்துள்ளார்.