சிறகுகள் முளைக்கும் வயதில்...

சிறகுகள் முளைக்கும் வயதில்...
தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற
இயக்குநர் நந்தகுமார், தனது சொந்த
ஊரைக் கூட வெளியுலகுக்கு
தெரிவிக்காமல், தனது கடந்தகால வாழ்க்கையை ரகசியமாக வைத்துள்ளார். 46 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். 23 வருடங்களுக்கு முன்பு, தன்னிடமிருந்து பிரிந்த காதலியை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய திரைப்படம் சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருது பெறுகிறது நந்தகுமார் அப்படத்தின் கதை தனது சொந்தக் கதை என்று கூறியுள்ளதால், நந்தகுமாரை பேட்டி எடுக்கும் டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் கௌதம், 'உங்கள் உண்மையான காதலி யார்? அவர் தற்போது எங்கிருக்கிறார்?' என்று கேட்கிறான். அதற்கு பதில் தெரிவிக்க மறுக்கும் நந்தகுமார் கோபமாக பேச... கௌதம் நந்தகுமாரின் காதலியை தேடிக் கண்டுபிடிக்க போவதாக கூறுகிறான். நந்தகுமாரின் முன்னாள் காதலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் 'தேடாதே குறுநாவல், இளைஞர்களின் வாழ்க்கையில்
இளம்பெண்கள் நுழையும்போது ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் 'சிறகுகள் முளைக்கும் வயதில்' உள்ளிட்ட நான்கு
குறுநாவல்களின் தொகுப்பு.