சிகரங்களில் உறைகிறது காலம்
நவீன இலக்கியமும் அரசியல் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டதே.இலக்கியத் துறையைப் பொருத்தமட்டில் கனிமொழி முற்றிலும் சுதந்திர உணர்வோடுதான் தன் கவிதைப் பாங்கைத் தெரிவு செய்திருக்கிறார்."சிகரங்களில் உறைகிறது காலம்" என்கிற இந்த மூன்றாம் தொகுப்பில் கனிமொழி தன் கவித்துவ ஆளுமையை எறுதி செய்து கொள்கிறார்.இந்தத் தொகுப்பில் அவரது கவிதை தன்னுடைய வெளிப்பாட்டுக்குப் பொருத்தமான வடிவத்தை அமைத்துக் கொள்கிறது.இசை நிகழ்ச்சி முடிந்தும் எழுந்து போகாத ரசிகன் மாதிரி கனிமொழியின் கவிதைகளைப் படித்து முடித்ததும் ஓர் உணர்வு ஏற்பட்டது.இன்னும் சில கவிதைகளை கனிமொழி தந்திருக்கக் கூடாதா என்று கேட்டது மனம்.