சிகரம் தேடி

சிகரம் தேடி
ஒரு சிறு பெட்டிக் கடையை வைத்து நடத்துவதும் சரி, ஒரு மாபெரும் தொழிற்சாலையைக்
கட்டி, பொருள்களை உற்பத்தி செய்வதும் சரி, அடிப்படையில் ஒன்றுதான். இவற்றை உருவாக்கி
நடத்துபவர்கள் தொழில்முனைவோர்கள்.
தொடர்ந்து தொழில் நடத்திவரும் குடும்பத்தில் வருபவர்களுக்கு தம் தொழிலை மேற்கொண்டு
எடுத்துச் செல்வது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. ஆனால் முதல்முறையாகத் தொழிலில்
இறங்குவோருக்கு, இது முற்றிலும் புதிய உலகம். எங்கிருந்து ஆரம்பிப்பது, எதைச் செய்வது,
எதைச் செய்யாமல் இருப்பது என்று ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல்
இருக்கும்.
பேராசிரியர் தில்லை ராஜன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் பலரிடமும் தான் பேசியதை
அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ‘நாணயம் விகடன்’ இதழில்
தொடராக வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் வாசகர்கள் பலரும் கேட்டுள்ள கேள்விகளும் அவற்றுக்கு
பேராசிரியர் தில்லை ராஜன் தந்துள்ள பதில்களும் இந்தப் புத்தகத்தில் விரவியுள்ளன. முதல்
தலைமுறை தொழில்முனைவோராக விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்
இது.