செதுக்கல்கள்

செதுக்கல்கள்
சேலத்தை பிறப்பிடமாகக் கொண்ட பிரேமலதா அவர்கள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டதாரி.. முதுகலை வணிக மேலாண்மையில் மனித வளத் துறையில் பட்டமேற்படிப்பு படித்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இளநிலை தொலைத் தொடர்பு பொறியாளராக பணியாற்றிய இவர், தன் தந்தைக்கு கொடுத்த வாக்கிற்காகவே 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் (குரூப்1) நேர்ச்சி பெற்று குடிமைப் பணியில் சேர்ந்தார். துணை ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார். இனிமையாக பாடக் கூடியவர். கார் ஓட்டும் அவரது கைகளின் விரல்களுக்கு வீணையும் பரிட்சயம். தமிழ்ப் பற்றும் இசை ஆர்வமும் கொண்டவர். கவிதைகளிலும் மிளிர்கிறார் என்பதற்கு இந்த நூல் சாட்சியாக இருக்கிறது.
வருவாய் துறைக்கு கிடைத்த வரம். ஆட்சித் துறையில் அணிகலனாக மட்டுமல்லாமல் படைக்கலனாகவும் விளங்குபவர் பிரேமலதா. ஜீப்புகளிலும் கோப்புகளிலும் ஜீவனம் என்றாலும் அவர் ஒரு கவிதை ஆவணம்.. மதிப்பெண்ணுக்காக பயிலாமல் மதிப் பெண்ணாக கல்லூரி காலத்திலேயே எனக்கு பேச்சினால் அறிமுகம் ஆனவர். அரசு எந்திரங்களில் சிக்கி நசுங்கி விடாத அனிச்ச மனம் அவருக்குள் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது அவரின் இந்த முதல் படைப்பு 'செதுக்கல்கள்'.
கவியருவி முனைவர் பேராசிரியர் அப்துல்காதர்
வாணியம்பாடி