சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம்

சேமிப்பு - முதலீடு தகவல் களஞ்சியம்
சி.சரவணன் அவர்கள் எழுதியது.
பணத்தைச் சேமிக்கச் வேண்டும் , அதைப் பல மடங்காகக் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சிலர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி அதில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வீட்டுக் கடன், குறைந்த வட்டி, வாடகை வருமானம்... இவற்றின் மூலம் எந்த வகையில் சேமிக்கலாம்? அதற்கு முறையான வழி என்ன, போன்ற விவரங்களையும் அறியாமல் இருப்பார்கள். இதேபோல ஓய்வு பெற்ற பிறகு தனக்கு நிரந்தரமாக ஒரு வருமானம் வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இப்போதே அதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள்.அப்படிப்பட்டவர்கள் இனி கவலை கொள்ளத் தேவையில்லை. சேமிப்பு, முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுத்து வழிகாட்டுகிறது இந்தத் தகவல் களஞ்சியம். மியூச்சுவல் ஃபண்ட் , பங்குச் சந்தை , வீ்ட்டுக் கடன் , மெடிக்ளைம், ஆயுள் காப்பீடு , ஓய்வுக் காலத்தில் வருமானம் , ரியல் எஸ்டேட், கிரெடிட் கார்டு போன்ற துறைகளில் எப்படி முதலீடு செய்யலாம் - லாபம் அடையலாம் - என அனைத்துத் தகவல்களும், சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களின் துணையுடன் திரட்டப்பட்டு இதில் இடம் பெற்றிருக்கின்றன.