சேக்கிழாரின் பெரியபுராணம்

0 reviews  

Author: பா.சு.ரமணன்

Category: பழங்கால இலக்கியங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  360.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சேக்கிழாரின் பெரியபுராணம்

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவனாகிய சிவபெருமான். தனது பக்தர்களைச் சோதிப்பதும், அந்தச் சோதனையை உலகம் போற்றும் சாதனையாக்குவதும் அவனது அளவற்ற திருவிளையாடல்களுள் ஒன்று அப்படிச் சிவபெருமானால் பலவிதங்களிலும் சோதிக்கப்பட்டு, அவனால் ஆட்கொள்ளப்பட்டு. அவளது திருவடியை அடையும் சிறப்பைப் பெற்றவர்களே அறுபத்துமூன்று நாயன்மார்கள். |cin| கருணை, இரக்கம், ஈகை, பணிவு, வீரம், தொண்டு என்று பல அருங்குணங்களைப் பெற்றிருந்த அவர்களை, அந்த இறைவனே நாடி, தேடி வந்தான். அதுவும் இறைவனாக வராமல் எளியவனாக, அடியவனாக, சாதாரணனாக, மக்களில் ஒருவனாக வந்தான். அப்படிப்பட்ட தொண்டர்களின் பெருமையை, தொண்டின் சிறப்பைக் கூறுவதே சேக்கிழார் பெருமான் எழுதிய 'பெரியபுராணம்."

இச்சிவத்தொண்டர்களது பக்தியின் தன்மையை, சாதாரண

மானுடர்களின் அளவுகோல் கொண்டு அளத்தல் இயலாது. நம்முடைய அளவுகோல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட நிலையில், மனிதப் புனிதர்களாக வாழ்ந்த பெருமக்கள் இவர்கள். அதனால்தான் சிவாலயங்களில் சிவனோடு இவர்களும் வழிபடத் தகுந்தவர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள்.

"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே"- என்ற ஔவையின் வாக்குப்படி, சொல்லவும் பெரிதான, சொல்வதற்கு மிகவும் அரிதான. சீரிய சிவநெறிப் படி வாழ்ந்த 63 சிவத்தொண்டர்களின் கதையே இந்த நூல்.

சேக்கிழாரின் பெரியபுராணம் - Product Reviews


No reviews available