சேகுவேரா வாழ்வும் மரணமும்

சேகுவேரா வாழ்வும் மரணமும்
சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும்: சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுவதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் கட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்- அதன் போக்குகள் அனைத்தையும் அந்த வடிவம் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்றாலும்கூட. ஸெலியா டொ லா ஸெர்னாவின் மகன் எவற்றுக்காகப் போராடி மரணமடைந்தாரோ, அவற்றை அங்கீகரித்ததைப் போல அறுபதுகள் நமக்கு அளித்திருக்கும் இந்தப் பொது அறுவதுகள் நமக்கு அளித்திருக்கும் இந்தப் பண்புகளையும் அவர் அங்கீகரித்திருப்பார் என்று நம்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் கமாண்டண்ட் ர்னஸ்டோ சே குவேராவும்கூட தனது கல்லறையின்மீது, தான் விரும்பிய கல்லறை வாசகத்தை எழுத அனுமதிக்கப்பட்டவில்லை. அவருடைய காலத்தில் வாழ்ந்த மிகச் சிலரைப் போல, தான் விரும்பிய மரணத்தை அடைவதற்கும். தான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதற்கும் மட்டுமே விதி அவரை அனுமதித்தது.