சரவண சதகம்
அண்ணன் வாலி அவர்கள் எனக்கு மூத்தவர் அனுபவங்களும் அவர் கண்ட சந்தித்த அரியோர்களும் சிந்தித்த அறிவுரார் சிந்தனைகளும் வாழ்வின் பல்வேறு காலங்களில் கிடைத்த அனுபவமும் - எனக்குக் கிட்டக் கூடியநோ?
கோயில் யானை நின்றிருக்க. ஆசிர்வாதம் செய்யச் சொல்ல அதன் அருகில் சென்றால் பாகள் யானை துதிக்கையைத் தலையில் வைக்கும், அப்போது அது விடும் மூச்சுக்கு நமது உடம்பிலுள்ள பல கேடுகளை நீக்கும் தன்மையுண்டு. அது நமக்குத் தெரியாது!
உடம்பிலுள்ள கேடு நீக்கும் யானையைப்போல யானை வடிவோனே - உயிரினுடைய கேடுகளாகிய வினைகளை நீக்குவாயாக என்று சுவையோடு தொடங்குகிறது - நூல்!
'பிள்ளையார் பதிகம்' - நான் விளக்கியது சாதாரணமாக இருந்தாலும் பாவில் எவ்வளவு... அழுத்தமாக அது பதிக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்! "விதிக்கை வரைந்த வினைகள் அனைத்தும் துதிக்கை எடுத்துத் துடை"
வெண்பாவிற்கு மிகவும் முக்கிய அம்சமே செப்பலோசையும் (வடிவமும்) ஈற்றடியும்தான்! அது இதில் எவ்வளவு உயர்வாக இருக்கின்றன என்பதைத் தமிழறிந்தோர் நிச்சயமாகப் போற்றுவர்!
இசைஞானி இளையராஜா