சங்க கால சாதி அரசியல்
சங்க கால சாதி அரசியல்
தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய் மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கிய உரையாசிரியர்கள் அள்ளிவிட்ட கருத்துப் பெட்டகங்கள்... போன்ற அச்சு வடிவம் பெற்ற ஆவணங்களை மாத்திரமே கணக்கில் எடுத்துக் கொண்டுதரவுகளை முன்வைக்கும் போக்குதான் இன்றளவிலும் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆய்வு அரசியல்.
பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது.விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று.
சங்க கால சாதி அரசியல் - Product Reviews
No reviews available