சங்காயம்
சங்காயம்
துரையின் கவிதைகள் புலன்வெளி கண்டுபிடிப்புகளால் பரவசமடைபவை. ஏதார்த்தத்தை மிக எதார்த்தமாக குறுக்கீடுகள். செய்வது இவற்றின் வாடிக்கை நெய்தலின் நிலவெளி மாயப்புனைவுலகில் சென்று கலக, நிதர்சனம் இங்கே விளையாட்டு பாவத்தில் ஜாலத்திற்குள்ளாகிறது. களவும் நனவுமாய் நிகழ்வுகள் இங்கே கலைத்து அடுக்கப்படுகிறது. கடலும் இரவும் மரணமும் இங்கே என்னவாக வேண்டுமாயினும் மாறலாம். இந்த சுதந்திரத்தில் இருந்தே அபத்தத்தையும் சிரிப்பையும் உற்பத்தி செய்கின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பௌதிக உலகிற்குள் அபௌதிக சாத்தியங்களை உருவாக்குவதன் மூலம் ஒன்றை இன்னொன்றாக ஆக்குவதிலும் ஒன்றில் வேறொன்றைக் காண்பதிலும் யாவற்றிலும் யாவும் இருப்பதாக நம்புவதிலும்
இவை முனைப்பு கொள்கின்றன. துன்பியல் நேர்வுகளில் கூட இவ்வுலகில் இருந்து கற்பனையும் மாயமும் மறைவதில்லை. அனுபவத்தை அணுகுவதில் உள்ள சாத்தியங்களை
மிகுவிப்பதிலும். அழுத்தம் கூடிவரும் வாழ்வின்
இடைவெளிகளில் அபத்தத்தையும் சிரிப்பையும்
கண்டுபிடிப்பதிலும் இக்கவிதைகள் வெற்றியடைகையில்
சதுரை தனது இரண்டாவது தொகுப்பை வெளியிடுகிறார்.
சங்காயம் - Product Reviews
No reviews available