சக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்)

சக்தினி பாதம் (தாந்திர சாஸ்திர யோக நூல்)
பிரணவ தேவி, காஞ்சி காமாட்சியே ஶ்ரீ வித்யா யோக மார்க்கத்தின் பரதேவதை ஆவாள். பிராம்மினி, கல்பதாரு, ஜகத் விலாசம், காதரூபினி, ஜகதாம்பிகை, தேவ கன்னிகை, பாலா அவள். அகிலாண்ட கோடி பிரம்மநாயகி அவளே. ‘சக்தினி பாதம், உமையாள் திருவருள் வீழ்ச்சி’ அவளே ஆவாள்.
தாந்திர சாஸ்திரத்தை விளக்கிக் கூறும் தெளிவான யோக நூல்கள் தமிழில் கிடைக்குமா என தேடிய போது எஉக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்படியே கிடைத்தாலும் அவை யாவும் மந்திரங்கள் நிறைந்த வைதீக சாஸ்திரப் புத்தகங்களாகவே, சாதாரண பக்தர்கள் புரிந்து கொள்ளவே கடினமாக இருந்தது. தெளிவான தமிழ் உரைநடை வடிவில் இல்லை. தாந்திர சாஸ்திரத்தின் முக்கிய நூல்கள் அனைத்துமே சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலுமே பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.
மனிதனின் சூட்சும உயிரை இரகசியமாக மறைத்து வைத்துள்ளது நம்முடைய ஸ்தூல தேகமே ஆகும். மனித உடலை இயக்குவது ‘உயிர்’ என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் அந்த ‘உயிர்’, எப்படி உடலை இயக்குகின்றது. அதற்கும் ‘பிரபஞ்ச சக்திக்கும்’ உள்ள தொடர்புகள் எல்லாம் எப்படிப்பட்டது ஆகிய சிக்கலான கேள்விகளுக்கு விடை அளிப்பது பண்டைய கால ஶ்ரீ வித்யா யோக மார்க்கத்தின் வழிமுறையே ஆகும். எனவு ‘உடல் இயக்கம்’ அனைத்தும் கொண்டது ‘தாந்திர சாஸ்திர’ முறையே ஆகும்.
மனிதனுடைய பேச்சில் பல நிலைகள் அடங்கி உள்ளது. மனிதனுடையய பேச்சிலிருந்து பிறந்தது சொல். அதிலிருந்து வார்த்தை, எழுத்து, மொழி, மதம், ஜாதி, நாகரீகம் என பலவாறு விரிந்தது மனிதனின் விந்தை உலகம். தன்னுள் உதயமாகும் எண்ணங்களை வார்த்தைகளாக்கி அதை அடுத்தவர்களிடம் தன் உணர்வுகளாக வெளிப்படத்தியும் பகிர்ந்து கொண்டு வாழவும் கற்றுக் கொண்டவன் அவன். எனவே, மனித இனம் பேச்சின் ஆற்றலை படிப்படியாக வளர்த்துக் கொண்டு முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. ஶ்ரீ வித்யாவின் யோக மார்க்கத்தில் மிக முக்கிய கட்டமே பேச்சின் அதிசூட்சும ஆழ்நிலைக்கு சென்று, அதனைத் தொடுவதில்தான் அடங்கி உள்ளது. பேச்சின் ஆழத்தின் அடியில் மறைந்திருப்பது ‘அறிவின் சுயம் பிரகாசமாகும்’. அறிவு மனிதனில் கலக்கும் இடம் பேச்சில் மட்டுமே. அந்த மகத்தான சாதனையை நமக்களிப்பது கேசரிவித்யா என்ற உன்னத மார்ககமாகும்.