சக்தி வழிபாடு
சக்தி வழிபாடு
சக்தி பிறக்குது மூச்சினிலே....’ என்றான் மகாகவி பாரதி. சக்தி தேவி மூச்சிழையோட்டமாக நமக்குள்ளேயேதான் இருக்கிறாள். அந்த தேவியைப் புரிந்துகொண்டால், நமக்குள் இருக்கும் ஆற்றலும் புரிந்துவிடும். ஒரு பெண் மகளாய், சகோதரியாய், மனைவியாய், தாயாய், பாட்டியாய் நடைமுறை வாழ்க்கையில் பலப் பரிமாணங்களில் வாழ்கிறாள். அந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் அவள் வெளிப்படுத்துவது அன்பை, அன்பை, அன்பைத் தவிர வேறில்லை. வெறும் மனித உறவுக்குள்ளேயே இப்படி அன்பைப் பரிமாறிக் கொள்ளும் இனிமை நிலவுமானால், மகாசக்தியாகிய பராசக்தி இந்தப் பூவுலகில் அனைவர்மீதும் எத்தகைய பாசத்தைப் பொழிவாள் என்பது எண்ணி எண்ணி மகிழத் தக்கது.
தான் படைத்த ஒவ்வொரு மனிதரையும் தானே நேரடியாக வந்து போஷிக்க முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள்.
அன்பு, இரக்கம், கருணை, பாசம், தயை என்று மனதின் மென்மையான உணர்வுகள் என்னவெல்லாம் உண்டோ அந்த உணர்வுக்கெல்லாம் மனித ரூபமாகத் தாய் விளங்குகிறாள் என்பது உலகறிந்த உண்மை. தாய் ரூபமாகவே அம்பிகை தன் பிள்ளைகள் மீது கருணை பொழிகிறாள். அதற்கும் அப்பால் தெய்வ அனுசரணையாக, தன்னைத் தஞ்சமடைந்தோரை கைத்தாங்கலாகத் தாங்கி, மடிமீது கிடத்தி, ஆசுவாசமளித்து, ஆற்றுப்படுத்தும் அனுக்ரக தெய்வமாக விளங்குகிறாள்.
இந்த அம்பிகை பல்வேறு ரூபங்களைக் கொண்டுள்ளாள். அவரவர் மனோநிலைக்கேற்ப, அவரவர் மகிழத்தக்க வகையில் பல வடிவங்களில் காட்சி தருகிறாள். அத்தனை வடிவங்களையும் தரிசித்து மகிழ்வதோடு, அவற்றை பூஜித்தும் தன் நன்றிக் காணிக்கையை பக்தன் செலுத்துகிறான். பல்வேறு காரணங்களுக்காக பராசக்தி மேற்கொண்டிருக்கும் சொரூபங்களை இந்தப் புத்தகம் விரிவாக, தெளிவாக விளக்குகிறது. தேவி உபாசகர்களுக்கு, தேவியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் நட்பான புத்தகம் இது.
சக்தி வழிபாடு - Product Reviews
No reviews available