சக்கரவாகம்

0 reviews  
Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சக்கரவாகம்

பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக் கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.’ –