சாகரம் (வேரல்)

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
சாகரம் (வேரல்)
நேர்மையான பத்திரிக்கையாளர் என்கிற முறையில் பாடுபொருள் எதுவாக இருந்தாலும் அதற்கான விவரங்களை அழகாகத் தொகுத்து எழுதுவதில் ஆற்றல் உடையவர் அமிர்தம் சூர்யா. நம்மோடு வாழ்ந்து இறைநிலை பெற்ற பெண் சித்தர்கள் குறித்தான இந்த நூலில் அதிகம் அறியப்படாத ஆன்மிகப் பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதன் ஊடே ஆலய வழிபாட்டு முறைகள், வரலாற்று சுவடுகள்,பக்தி இலக்கிய தரவுகள் எல்லாவற்றையும் ஊடு பயிராக கட்டுரையில் விதைத்துள்ளார் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா. இந்த நூலைப் படித்து முடிக்கையில் நிபந்தனையற்ற அன்புடன் நமது குடும்பத்தில் நமக்காக உழைத்து நமக்காக வாழ்ந்து வழிக்காட்டி மறைந்த மூதாட்டியை யதார்த்த பெண் சித்தர் வகைப்பாட்டில் வைத்தாலும் சரியென்றே தோன்றியது. சிறிய நூலாக இருந்தாலும் அமிர்தம் சூர்யாவின் எழுத்து சிந்தனையைத் தூண்டுகிறது.
- எழுத்தாளர் .சுப்ர.பாலன்