ராமோஜியம்
ராமோஜியம்
எதிர்பார்த்தபடி மாமி “என்ன சாப்பிடறீங்க, ஹார்லிக்ஸா போர்ன்விடாவா ஆல்விடோனா?” என்று கேட்டாள். அது என்ன ஆல்விடோன் என்று அவளைப் பார்க்க ராமாராவ் மாமா பொக்கைவாய்ப் புன்னகையோடு கட்டை குட்டை மகாத்மா காந்தியாக இருந்து சொன்னார் – “அது நான் எடுத்த ஏஜென்சி. கல்யாண அலையன்ஸ் அரேஞ்மெண்ட் ஓட மாட்டேங்குது. பசங்க எல்லாம் டைப், ஷார்ட் ஹேண்ட் படிச்சுட்டு பம்பாயிலே வேலைக்கு ஓடறதிலேயே குறியா இருக்காங்க. பலசரக்குக்கடையை எடுத்தாச்சு. நின்னு வியாபாரம் பண்ண முடியலே. சும்மா இருக்கவும் முடியாம முதல்லே ஸ்டேன்ஸ் காப்பிக்கொட்டை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். அதுலே பாரு. எல்லாம் நல்லா இருக்கு, காலி காபிகொட்டை டின்னை திரும்பித் தரணுமாம். நம்ம ஊர்லே காப்பிக்கொட்டை, பொடி வாங்கறபோதே காலி டின்னு உனக்கு எனக்குன்னு ரிசெர்வ் பண்ணிட்டு போயிடுவாங்க. வீண் சண்டை வரும். அதான் அடுத்து சாதுவா ஆல்விடோன் காண்ட்ராக்ட் எடுத்தேன். எல்லாம் ஒரே சமாசாரம் தான். பால் பவுடர், கோக்கோ. உள்ளூர் சரக்கு. கமிஷன் நிறைய தர்றாங்க. கல்யாணம், சீமந்தம் இப்படி நிகழ்ச்சியிலே எவ்வளவு கேட்டாலும் கொடுக்க சாப்பாட்டு காண்ட்ராக்டருக்கு கட்டுப்படியாறது”. மாமா இன்னும் அரை மணி நேரம் பேசியிருந்தால், நானும் அவரிடமிருந்து ஒரு டஜன் ஆல்விடோன் டின்கள் வாங்கியிருப்பேன். ரத்னா கொண்டுவந்த மதறாஸ் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் ஸ்வீட்ஸ் அட்டை டப்பாவை அவர்களிடம் கொடுத்தாள். மாமிக்குப் பிடித்த பாதுஷா.
ராமோஜியம் - Product Reviews
No reviews available