புரட்சியின் உச்சகட்டம்

புரட்சியின் உச்சகட்டம்
இந்நூலின் ஆசிரியர் வே பத்மாவதி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு கணிப்பொறி வல்லுனராகப் பணியாற்றி வரும் இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
இருநூறுக்கும். மேற்பட்ட சிறுகதைகள், வெவ்வேறு இதழ்களில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளதோடு, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் இணையட்டும் இதயங்கள், பெங்களூரு தமிழ் சங்கம், துளி ஆகிய அமைப்புகளில் இருந்தும் விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது. மேலும் சில சிறுகதைகள் உருது மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"நாட்டுப்புற இலக்கியங்கள்" என்னும் தலைப்பில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக 'சிங்கப்பூர் மணற்கேணி' அமைப்பு இவருக்கு சிங்கப்பூரில் பாராட்டு விழா நடத்தி கௌரவித்துள்ளது.
பெருமைக்குரிய பெண்மணி, சாதனை அரசி போன்ற பல்வேறு விருதுகளுக்குச் சொந்தகாரரான இவர் தற்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் நான் படித்த புத்தகம் எனும் நிகழ்ச்சியின் மூலம் புத்தக விமர்சனங்கள் செய்து வருகிறார்.
'புரட்சியின் உச்சகட்டம்' எனும் இந்நாவல் தினமலர் இதழில் தொடராக வெளியான இரண்டாவது நாவல்.