புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம்
இந்த புத்தகம் எழுதியதின் நோக்கம் இன்றய ஜனநாயகத்தில் நிலவும் குறைகளை நீக்க. இன்றய ஜனநாயகம் கட்சிகளின் அடிப்பையில் இயங்குகிறது. இதில் பல்வேறு குறைபாடுகள் நிறம்பி உள்ளன. கட்சிகள் மக்களின் மூலையை மழுங்கடித்து வாக்குகளை பெருகின்றனர். பணம் பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறது. இந்த கட்சி ஜனநாயகத்தில் வாக்கு பெட்டிகளை அபகரித்தல், தற்போது ஈவிஎம் இயந்திரத்தை மாற்றுதல், அல்லது அதில் மாற்றம் செய்தல் நடக்கின்றன. ஆலும் கட்சிகள் தன் அதிகாரத்தை பயன் படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்து வெற்றி பெறுகிறார்கள். தேர்தல் கமிஷன் நேர்மையிழந்து சிலருக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது.
கட்சி ஜனநாயகத்தில் கட்சி தலைவர் தனி ஒருவர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கின்றார், எல்லா அதிகாரமும் அவரிடம்தான் இருக்கிறது மற்றவர்களுக்கு போதிய அதிகாரம் இல்லை. பதவி மோகத்திற்காகவும் பணத்திற்காகவும் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகிறார்கள். இதேபோல் கட்சிகளும் தாங்கள் வேறுகட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்து கொள்கிறார்கள். ஜாதி மதங்களை வைத்து கட்சிகள் வேட்பாளர்களை தேர்தெடுக்கிறார்கள். பணம் அதிகம் தருபவருக்குதான் கட்சியில் சீட் கிடைக்கிறது. அவர்கள் கல்வி தகுதி குற்றசெயலை பார்பதில்லை ஜாதி மதத்தை வைத்து சீட் கொடுக்கிறார்கள்.
இந்த கட்சி ஜனநாயக முறை மேலும் பல கட்சிகள் உருவாக வழிவகுக்கிறது. ஆதலால் கட்சியற்ற புதிய ஜனநாயக முறை நாட்டிற்கும் உலகிற்கும் பெருத்த நன்மை தறும் என நம்புகிறேன்.
புதிய ஜனநாயகம் - Product Reviews
No reviews available