வாத்யார்
வாத்யார்
ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதயிது.
தமிழகத்தை பொருத்தவரை எம்.ஜி.ஆர் என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோ கூட இல்லை. அது ஒரு குறியீடு.இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காம்ராஜ் செய்தது தானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா?அதுவும் அரசியலில் புதிதில்லையே? எம்.ஜி.ஆர் என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது. சினிமாவில் இருந்தவரை அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது.முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை.நேருவின் மகளானாலும் சரி வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி.அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்தரம். பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லைமல் ஒரு பெரிய பாடம்.வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னிம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான,முழுமையான வாழ்க்கை வரலாறு இது. பெரியார்,அம்பேத்கர் ,இந்திரா வரிசையில் ஆர்.முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.
வாத்யார் - Product Reviews
No reviews available