உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்
உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்
என்.வீரண்ணன் அவர்கள் எழுதியது.
ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும் அனைவருக்கும் ஏமாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியரும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் மெளனமாகவே இருந்துவிட்டார்.இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் எழுத்தாளனை அவர் காலத்தில் வாழ்ந்த எவருமே கண்டுகொள்ளாமல் எப்படி இருந்தார்கள் என்பதே. அவருடைய மேதாவித் தனத்திற்கு தக்க மரியாதை கிடைக்காமல் போனது வருந்தத்தக்கதே. ஷேக்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தன்னுடைய 52ஆம் வயதில் இறந்தார். பூத உடல் அழிந்தாலும் தன் எழுத்துக்களின் மூலம் ஷேக்ஸ்பியர் இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Product Reviews
No reviews available