திருத்தி எழுதிய தீர்ப்புகள்
கவிதை என்பது ஒரு மொழியின் புடைப்பு சிற்பம் நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தடமாய் நிற்பது எனவே தன் சமூகத்தை தன் மக்களை தன் சிறப்பை மட்டுமின்றி சிதிலத்தையும் பிரதிபலிக்க வேண்டியது அதன் கட்டுப்பாடு
வைரமுத்து நம் காலத்தில் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன
தனி நபர்களையல்ல ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள் இந்ததொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களை தம் பயணப் பாதைகளாக்கி கொள்கின்றன ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின்றன
மனித குலம் முழுமைக்குமான மகிழ்ச்சி என்பதே வைரமுத்து கவிதைகளின் சாரம் இந்த தொகுப்பும் அவருடைய எல்லாத்தொகுப்புகளும் இதைத்தான் தம் மெளன முன்னுரையாக எப்போதும் சொல்கின்றன...................
திருத்தி எழுதிய தீர்ப்புகள் - Product Reviews
No reviews available