தமிழகத்தில் மாற்றுக் கல்வி
தமிழகத்தில் மாற்றுக் கல்வி
இன்றைய கல்விமுறை ஒரு மாணவர்மீது செலுத்தும் தாக்கம் எத்தகையது?
· கல்விக்கூடத்தில் இருந்து ஒரு மாணவர் என்ன பெற்றுக் கொள்கிறார்? · அவ்வாறு பெற்றுக்கொண்டதை வைத்து அவர் எப்படித் தன் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்கிறார்?
· சமூகத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறார்?
ஆராய்ந்து பார்த்தால் சோகமே எஞ்சுகிறது. பள்ளிக்கூடங்கள் பெருகிய அளவுக்கு அறிவாற்றல் பெருகவில்லை. பள்ளிக் கட்டணம் உயர்ந்த அளவுக்கு சிந்தனைத் திறன் உயரவில்லை. மனனம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அளவுக்குச் சுயமாகச் சிந்தித்து ஆய்வுகள் மேற் கொள்ள மாணவர்கள் தூண்டப் படவில்லை. மொத்தத்தில் ஒரு மாபெரும் தொழிற்சாலையைப் போல் இயந்திரகதியில் மாணவர்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டிருக்கின்றன பள்ளிக்கூடங்கள்.
இந்த நிலையை மாற்றுவது எப்படி என்பதைத் தமிழகத்தின் முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் இந்தப் புத்தகத்தில் விவாதிக்கிறார்கள். கற்கும் முறை, கற்பிக்கும் முறை இரண்டை யும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும், கற்றறிந்த நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான செயல்திட்டங்களும்கூட இதில் விவரிக்கப்பட்டுள்ளன. சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல், தமது கல்விச் சிந்தனைகளை மையமாக வைத்து பள்ளிகளை நடத்தும் செயல்வீரர்களும் தமது வழிமுறை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தமிழகத்தில் மாற்றுக் கல்வி - Product Reviews
No reviews available