குஜராத் திரைக்குப் பின்னால்

குஜராத் திரைக்குப் பின்னால்
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும். இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி. ஸ்ரீகுமார், குஜராத் மாநில காவல்துறை, உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அவரது திறமை மற்றும் நேர்மைக்காக அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் நடந்த சமயத்தில் உண்மையான அறிக்கைகளை அளித்தார் என்பதற்காக நரேந்திர மோடி தலைமை தாங்கிய குஜராத் பாஜக அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம்தான் அவரை டிஸ்மிஸ் செய்யப்படுவதிலிருந்து, காத்து, அவர் ஓய்வுபெற்றபின் அவருக்கு காவல்துறைத் தலைவர் பணியில் பதவி உயர்வு அளித்தது. இந்தப்புத்தகம் மிகவும் விரிவான அளவில் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். – ஏ.ஜி. நூரணி,