தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்
பொருளின் கட்டுபாட்டிலிருந்து விடுபட்டுப் பொருளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் மனிதர் கொண்டு வந்ததற்கான பொருள் இகந்த ஆற்றலை வழங்கியவை அறங்களே.மனிதர்தம் ஐம்புலன்களின் அமுக்கம் அறநடத்தையாகி ஆற்றலாகிறது.அவ்ஆற்றலால் இயற்றை மனிதமயமாக்கப்பபடுகிறது. மனிதமயமான இயற்கை வீட்டுவசப்படுத்தப்பட்டு உடைழையதகிறது.இத்தகைய வினை, மனிதர்க்கு இடையிலும் செயல்பட்டு மனிதர்க்கு மனிதர் உடைமையாக்கப் பட்டனர். உடைமை / அறம் என்ற இரண்டு கருத்தாக்கங்களம் ஏறுவரிசை முறையில் அமைப்புறுகின்றன. நன்மை-தீமை, முதல் - கடை என்று அறங்களிலுள்ள ஏறுவரிசைப்படியே உடைமையில் உள்ளவன் - இல்லாதவன் ,ஆள்பவன் - ஆளப்படுபவன், ஆண் - பெண் , சான்றோன் - புலையன் ... முதலில் ஏறு வரிசை கட்டப்படுகின்றன.மனித உடல் பகுதிகளில்,உணவு-உடை-உறையுள் ஆகியவற்றில் மென்புலம்-வன்/புன் பலம், கழனி - களர் என இடப் பரப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் வரையப்படுகின்றன. இம்மாபெரும் மாற்றங்களுக்கு அறம் என்னும் கருத்தியல் சாதனம் பெரும்பங்காற்றி வந்துள்ளதைப் பார்த்தால் வியப்பாக இ.ருக்கிறது. வேடர்கள் வீரர்களானார்கள்; உணவும் பெண்ணும் உடைமைகள் ஆனார்கள். வேட்டைக் கலாச்சாரம் மட்டும் மாறவெ இல்லை.
தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் - Product Reviews
No reviews available