சத்திய சோதனை (கவிதா வெளியீடு- இந்திரா பார்த்தசாரதி)
சத்திய சோதனை (கவிதா வெளியீடு- இந்திரா பார்த்தசாரதி)
தமிழ் மொழியின் சரித்திரத்தில் அரசியல் என்னும் சொல்லுக்கு ஈடாக வேறெந்தச் சொல்லும் கொச்சைப்படுத்தப்பட்டதுகிடையாது. முன்பெல்லாம், அரசியல் என்றால் அது நாட்டை நிர்வகிக்கும் கலை. இன்று? அரசியல் செய்வது என்றால் வஞ்சகமாக ஏமாற்றுவது; தந்திரமாக மாறுவேடம் போடுவது; திறமையாக முகமூடிகளை மாற்றிக்கொண்டே இருப்பது; எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது - இன்னபிற. இத்தனை கலைகளையும் உள்ளடக்கியதுதான் இன்றைய அரசியல். இந்தக் கலைகள் அனைத்தையும் விரல் நுனியில் தேக்கி வைத்திருப்பவர்தான் மெய்யான அரசியல்வாதி. இ.பா.வின் சத்திய சோதனையில் வரும் அரசியல்வாதி அப்படிப்பட்ட ஒருவர். நாடு, கட்சி, லட்சியம், கொள்கை - எது ஒன்று பற்றியும் இவர் கடுகளவும் சிந்தித்தது கிடையாது. அரசியல் செய்ய மட்டுமே இவருக்குத் தெரியும். காந்தியின் சத்திய சோதனையை வாசித்திருக்கிறோம். இந்த அட்டகாசமான அரசியல்வாதியின் நவீன சத்திய சோதனையை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? ஓர் அரசியல்வாதி எப்படி உருவாகிறான், எப்படி உருவாகக்கூடாது - இரண்டையும் ஒருங்கே சொல்லும் அபூர்வமான நையாண்டி நாவல் இது.
சத்திய சோதனை (கவிதா வெளியீடு- இந்திரா பார்த்தசாரதி) - Product Reviews
No reviews available