போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் கேள்விகள் கேட்கப்படும். பொருளாதாரப் பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் எளிதில் விடையளித்து விடுவார்கள். ஆனால், மற்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், சரியான புரிதல் இல்லாததே. அதைப்போக்கும் விதமாக நாணயம் விகடனில் தொடராக வந்தவைதான் இந்தக் கட்டுரைகள். ரூபாய் 1,2,3 என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து எளிமையாகக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். பொருளாதாரப் பாடத்தலைப்புகளில் இருந்து போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளோடு விளக்கங்களையும் தந்துள்ளது சிறப்பம்சம். பொருளாதாரப் பாடத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை ‘ஒரு வரிக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நூலைப் படித்து முடித்தவுடன், பொருளாதாரப் பாடத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்பது நிச்சயம்.
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் - Product Reviews
No reviews available