நிரம்பியும் காலியாகவும்
நிரம்பியும் காலியாகவும்
சுயம்புலிங்கப் பெரியப்பா முகம் இங்கே இல்லை. நடுத்தெரு வீட்டில் இருந்தது. 'ஒரு ஆள் இருக்கும் போது ஒண்ணும் தெரியலை, போன பிறகுதான் மூச்சு விடுகிற சத்தம் வரைக்கும் கேக்கு. பெரியம்மை வலது காலைக் கொஞ்சம் தேச்சுத் தேச்சுதான் நடப்பா. உத்துப் பார்த்தால் தான் தெரியும் வலது கால் மிஞ்சி காலை விடத் தேஞ்சிருக்கும். அந்தத் தேய்மானம் தரையில உரசுகிற சத்தம் கேக்கும். ஒரு உருண்டை, சாப்பிட்டால் கூட கையைக் கழுவி முடிக்கிறதுக்குள்ள தொண்டைக்கும் வாய்க்குமா ஒரு ஏப்பம் போடுவா.. அது கேக்கும். புற வாசலிலே தென்னங் கிடுகு ராத்திரித் தானா விழுந்திருக்கும். விடியக்காலம் வென்னியறை வரை தரையோட தரையா அவ இழுத்துட்டுப் போகிற சத்தம் கேக்கும். ஒரு நா, ஒரு பொழுது விடாம விளக்குப் பூசை பண்ணுவா. இம்புட்டுப் போல ஒரு வெங்கல மணி கும்பகோணத்தில வாங்கினது வச்சிருப்பா? அதை அடிச்சுக்கிட்டே தீவாரணை காட்டுவா. இவ தேவாரம் பாடுகிற மாதிரி, அதுவும் கிணுகிணுண்ணு அவள் கூடச் சேர்ந்துக்கிட்டு பாடும். அந்த வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுகிறதுக்கு முந்தி எல்லோரும் சாமி கும்பிட்டோம் T hat L hat D சைலப்பன் கையில இருந்த மணியை நான் வாங்கி அடிச்சுப் பார்க்கேன். திருப்பித் திருப்பி அடிக்கேன். பெரியம்மை அடிக்கிற அந்தச் சத்தம் வரவே இல்லை. சுயம்பு பெரியப்பா அழ ஆரம்பித்திருந்தார்.
நிரம்பியும் காலியாகவும் - Product Reviews
No reviews available