நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை
நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை
இன்றைய சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் ‘திருமூலர்’. பக்தி யோகத்தை விட முற்றிலும் மாறுபட்ட கடினமான சித்த யோகத்தின் ‘யோக நித்திரை’, தவம் மற்றும் நிஷ்டை’ மார்க்கத்தை இப்பூவுலகில் பன்நெடுங்காலம் வாழ்ந்து நிலை நிறுத்தியவர் திருமூலர். திருமூலர் கடைபிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றியவர் கடந்த 17ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் மதுரை மதநகரத்தில் அவதரித்தவர் நெரூர் ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் ஆவார். திருமூலருக்கு பின் சித்த யோக மார்க்கத்தின் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளின் சிகரங்களை எல்லாம் சுயஅனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் என்ற பெருமையை பெற்றவர் ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் ஒருவரே ஆவார். இம்மகானின் வாழ்க்கை சரித்திரத்தீல் நிதழ்நத பல சுவையான சம்பவங்களையும் ஶ்ரீ அமரகவி சித்தேஸ்வரரின் வாழ்க்கையுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்து நின்று ஆசி புரிந்த விதத்தையும் இந்நூலில் விரிவாக காணலாம். பிரம்மேந்திரர் வெற்றி கண்ட யோக சித்திகளான “பூரண கும்ப சித்தி, மனோலய சித்தி, சித்பிரகாச நிஷ்டை சித்தி, அத்வைத பிரக்ஞை, சிவசக்தி சம்யோகம் சித்தி” போன்றவை விளக்கமான முறையில் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சிறு வயது முதல் பிரம்மேந்திராள் அனுபவித்து வந்த “பிரக்ருதி லயம், பிரம்ம பாவனை, சர்வம் பிரம்ம மயம்” போன்ற விஷயங்களும் குறிப்பாக பிரம்மேந்திராள் கையாண்ட ஸ்தூல, சூட்சம், காரண தேகங்களின் சமாதி முறைகள் இதுவரை யோக சாதனையில் எவருமே துணிந்து செய்திராத முறைகளாகும். பிரம்மேந்திராள் இயற்றிய பக்தி கீர்த்தனைகள், அவர் தமிழகத்தில் சஞ்சாரம் செய்த முக்கிய இடங்கள் மற்றும் கரூர் நகரைப் பற்றிய சில குறிப்புகள் கோன்றவையும் இடம் பெற்றுள்ளன. பக்தர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பிரம்மேந்திரர் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை வண்ண ஒவியங்கள் மூலமாக வரையப்பட்டு மொத்தம் 16 வண்ணப் படங்கள் இப்புத்தகத்திற்கு புது பொலிவையும்,மெருகையும் கூட்டும் விதமாக அமைந்துள்ளது.
நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை - Product Reviews
No reviews available