கடவுளைத் தேடாதீர்கள்!
கடவுளைத் தேடாதீர்கள்!
பிரச்சனைகளுக்கு வடிகால் தேடி ஆன்மீகத்தை நாடுகின்ற மனிதர்கள் போலிகளின் கைகளில் சிக்குண்டு ஏமாறுவது கசக்கிற உண்மை.உண்மையான ஆன்மிகம் எது?உய்த்துணர வேண்டிய வாழ்வின் உட்பொருள்கள் என்னென்ன?மெய்ஞானம் முன்மொழியும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது?இந்த கேள்விகளுக்கு விளக்கங்களோடு சக்தி விகடன் இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதிய கலகல கதைகளின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம்.அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆறுதல்களில் உரிய நேரத்தில் செய்யும் உதவிகளில் ஆத்மார்த்தமான பாசப் பகிர்தல்களில் வெளிப்படும் இறை அனுபவத்தை உணராமல் ஆலயங்களில் இறைவனைத் தேடும் பேதைகளின் தலையில் பேனாவால் குட்டியிருக்கிறார் தென்கச்சி.குழலின் உட்சென்று வெளிவரும் காற்று இசையாக மோட்சம் எய்துதல் போல-சிப்பியில் விழுகிற மழைத்துளி முத்தாகப் பரிணமித்தல் போல தென்கச்சியின் சிந்தனையில் விழுந்த வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கும் இந்தக் கதைகளில் காயம்பட்ட மனதுக்கு ஆறுதல் மருந்தாக இருக்கின்றன.தேடல் மனம் கொண்டவருக்கு தத்துவ வெளிச்சமாகவும் தரிசனம் தரிசனம் தருகின்றன.அரிய கருத்துக்களை எளிய மொழியில் இயல்பான நகைச்சுவையோடு எழுதுயிருக்கும் தென்கச்சி உங்களை மகிழ்விக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறார்.
கடவுளைத் தேடாதீர்கள்! - Product Reviews
No reviews available