நெல்லை ஜமீன்கள்
நெல்லை ஜமீன்கள்
ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள்தான் செய்து வந்தன. வரி வசூலித்து மன்னருக்குக் கொடுத்தது போக மீதியை அவர்கள் அனுபவித்துக்கொண்டனர். தங்களை மகாராஜாவாக எண்ணிக்கொண்டு ராஜ தர்பார் நடத்தி, ஒரு கட்டத்தில் தாங்கள்தான் எல்லாமும் என தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தனர். மிருகங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜமீன்தார்கள், மக்களை அடிமை போல நடத்தி, அராஜகம் செய்து பொதுமக்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தனர். விதிவிலக்காக சில ஜமீன்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உயிரையும், பொருளையும்கூட இழந்துள்ளனர். அரசாங்கத்தால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராஜாவாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் சாதாரண மனிதர்களாகிவிட்டனர். இந்த ஜமீன்களின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை போல் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஜமீன்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை அடிமைபோல் நடத்தி அராஜகம் செய்வோர் பின்னாளில் எத்தகைய நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதும் இந்த நூலின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
நெல்லை ஜமீன்கள் - Product Reviews
No reviews available