நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?

0 reviews  

Author: நா.வீரபாண்டியன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?

ஜவஹர்லால் நேரு மறைந்து அய்ம்பெத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இந்திய நாட்டின் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தவல்ல ஆளுமை அவருடையதாக இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. உலக அரங்கில், விடுதலை பெற்ற இந்தியாவிற்கு பெருமையும், மரியாதையும் கூடுவதற்கு பெரும் பணி ஆற்றியவர் நேரு. நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பி என்று அவர்தம் அரசியல் பகைவர்களும் சொல்லத்தக்க வகையில்  இந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஓயாது உழைத்தவர் அவர். விடுதலை பெற்ற பின் தொடர்ந்த  இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் ஒற்றை முகமாய் உலக மக்கள் மனங்களில் பதிந்தவர்.

இத்தகைய மனிதாபிமானி நேருவுக்குப் பின்னர், அய்ம்பத்தெட்டு ஆண்டுகளில் இதுநாள்வரை பதினைந்து பிரதமர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும், அவர் பற்றிய அவதூறுகளும், வசைச் சொற்களும் அணையாப் பெருந்தீயாய் நித்தமும் ஊதி வளர்த்து, இன்று நம் நாட்டில் நிலவும் அனைத்து அலங்கோலங்களுக்கும் அவரே பொறுப்பு என்று ‘வெறுப்பு அரசியலை’ மட்டுமே வைத்து ‘பிழைப்பு அரசியலை’ செய்வோரின் பொய்களில் சிக்குண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் முன் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்? - Product Reviews


No reviews available