திராவிடமும் சமூக மாற்றமும்
திராவிடமும் சமூக மாற்றமும்
முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், இப்போது தமிழ்நாடு அரசு மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். 1995ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதுவரை 65 ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளார். 55 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் தலைசிறந்த ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லுநரான இவர், கடந்த பத்தாண்டுகளாக. ஊடக விவாதங்களில் பங்குகொண்டு பொதுமன்றத்தில் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வாழ்க்கை நிலைமைக்கும் இடையேயான தொடர்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடந்த முப்பது ஆண்டுகளில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், தமிழ்நாட்டுக் கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படையான சமூக மாற்றம் குறித்து விவரிக்கின்றது. இச்சமூக மாற்றத்தை 'வேளாண்மைக்கு பிந்தைய சமூகம் என்ற கருத்துச் சட்டகத்தின் வழி விளக்குகின்றது. திராவிட இயக்கம் முன்கொண்டு செலுத்திய சமூகநீதிக் கொள்கை நோக்கு நடவடிக்கைகளும் சமூகநலத் திட்டங்களும் சாதிமுறையால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அடிமைத் தளைகளை உதறியெறிவதற்கும் உரிமைகளை அனுபவிப்பதற்குப் முன்னேறிச் செல்வகற்கும் உதவியுள்ளன என்பதைக் கண்கூடாக எடுத்துக்காட்டுகிறது.
திராவிடமும் சமூக மாற்றமும் - Product Reviews
No reviews available