ஞானம் சுமந்து வந்த நதி
Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
ஞானம் சுமந்து வந்த நதி
கன்யாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி முதலிய தமிழக நகரங்களுக்கெல்லாம் விஜயம் செய்துவிட்டு சென்னையில் படர்ந்தது விவேகானந்தப் பேரொளி. எங்கு சென்றாலும், அவரை அன்பர்கள் சூழ்ந்தார்கள். தினமும் அவரைப் பார்க்க, ஏராளமான கூட்டம் வந்து கொண்டிருந்தது. எல்லோரிடமும் அவர் இதமாகப் பேசினார். இந்து மதத்தை, புது அணுகுமுறையில் எடுத்துரைத்தார். வேதங்களும் வேதாந்தங்களும் அவர் நாநுனியில் நர்த்தனம் புரிந்தன. அந்நாளில் நிறைய பேர், மேற்கத்திய மோகத்தோடு இருந்தார்கள். வேதம் என்பது என்ன? அதன் ரிஷிகள் என்பவர் யார்? எல்லாமே அர்த்தமில்லாத உபதேசங்கள்! என்று அவர்கள் கூறியபோது, விவேகானந்தர் சிங்கம்போல கர்ஜித்தார். விவேகானந்தரைப் பற்றி ஆயிரம் நூல்கள் இருக்கலாம். இதுவோ, முற்றிலும் வித்தியாசமாக!
ஞானம் சுமந்து வந்த நதி - Product Reviews
No reviews available