மூன்றாம் பரிமாணச் சிந்தனை
மூன்றாம் பரிமாணச் சிந்தனை
எதிலும் தோல்வியடைந்து மறுபடி முயற்சிக்கும்போது எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அதில் கவனம் செலுத்தி முயற்சிப்பது , ஆகி வந்த சிறந்த வழி . ஆனால் முதலில் ஆரம்பிக்கும்போது இருந்த உணர்வுகள் 2 ஆவது முயற்சியில் இருக்குமோ என்பது கேள்விக்குறி. ஏனெனில் வெற்றி என்பது முதல் பரிமாணம். தோல்வி என்பது 2ஆவது பரிமாணம்.இதில் தோல்வியை சந்தித்தவுடன் அதிலிருந்து மறுபடியும் முதல் பரிமாணம் செல்ல யத்தனிக்கும் செயல்தான் நிகழ்கிறது. தோற்றுவிட்டோம் என்று நினைத்து ஒதுங்கிஙிருந்து ஒருவாறு தேறி அல்லது ஆழ்நிலைக் கட்டாயத்தில் மறுமுயற்சியை ஆயத்தமாகிறோம். ஆனால் இதையே புதிதாகப் பார்க்க புரிந்துகொள்ள முடிந்தால்...?இப்படி முடியும் என்பதுதான் மூன்றாம் பரிமாணச் சிந்தனை. இதற்கான சக்தி நம்மில் ஒவ்வொருவரிடமிருந்து இருக்கிறது.இதை எப்படி அடையாளம் கண்டுகொள்வது - என்பதை எளிமையாககட கூறுவதுதான் இந்த நூலின் நோக்கம். இக்கட்டில் சிக்கித் தவிக்கும்போது மரபாக வழிவந்த ரீதியில் சிந்திக்காது அறிவும் உணர்வும் கலந்த மூன்றாம் பார்வையில் சிந்திப்பதால் ஏற்படும் நன்மையில் பலன்களை சில உதாரணங்கள் மூலம் இந்த நூலில் காணலாம். தீர்வுகளை நோக்கியே பயணிக்கும் நம் சிந்தனைகளுக்கு ஒரு பாதையை வகுத்தக்கொள்ளும் கலையை இந்நூல் காட்டுகிறது.எதையும் நாம் அணுகும் முறையை வைத்து நம்மை எடைபோட்டுக் கொள்ளும் சுய பரிசோதனைக்கலை இந்த நூலில் உதாரணங்களைப் படிக்கும்போது நமக்குள் வளர்ச்சி பெறும்.
மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Product Reviews
No reviews available