அறிந்ததினின்றும் விடுதலை

அறிந்ததினின்றும் விடுதலை
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து 'அறந்ததினின்றும் விடுதலை' கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.மனிதனி்ன் இக்கட்டான நிலைமை குறித்தும் அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளின் ஒரு தொகுப்பு இந்த நூலில் உள்ளது.ஐரோப்பாவிலம் இந்தியாவிலும் அவர் ஆற்றிய நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளிலிருந்து வாசகங்கள் தொகுத்து எடுக்கப்பட்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.அவருடைய நெடுங்கால நண்பரும் அவரின் வாழ்க்கை சரிதத்தை எழுதியவருமான மேரி லட்யன்ஸ் அம்மையாரை இந்த நூலை தொகுத்து அளிக்குமாறு கிருஷ்ணமூர்த்தியே கேட்டுக்கொண்டார்.அதற்கான பெயரையும் அவரே கூறினார்.கிருஷ்ணமூர்த்தி கூறிய சொற்றொடர்களை மாற்றாமல் படிப்போர் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவுகளின் தொகுப்பு மட்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.