கலுங்குப் பட்டாளம்
கலுங்குப் பட்டாளம்
கலுங்குப் பட்டாளம் - முதுமைக்கும் வெறுமைக்கும் இடையிலான நினைவுகளின் உரையாடல். மனித உணர்வுகளில் மகத்தான ஆற்றல் நல்லதும் கெட்டதுமான அவனின் நினைவுகளுக்கு உண்டு. அதன் மூலம் கிடைக்கப்பெறும் அலாதியான இன்பங்களும் துன்பங்களும் சில நேரங்களில் ஆறுதலாக அமையும், இல்லையேல் காலைச் சுற்றிய கரு நாகம் போல் விசம் தீண்டி நோகடிக்கும். இது முதுமையும் தனிமையும் சேர்ந்தத் தருணத்தில் ஒருவனை வதைத்தால், அந்த வெறுமையைக் கொன்றொழிக்க நினைவுகளில் மிச்சமிருக்கும் தடங்களைத் தேடி அலைய நேரிடும். அப்படி இந்நாவலில் பட்டாளத்தான் தேடிப் போகும் இடம் தான் ‘கலுங்கு.’ நீர்நிலைகளின், குளங்களின் அல்லது ஆறுகளின் ஓரம் இயற்கையின் நேசர்கள் அமர்ந்துப் பேசும் அல்லது கதைக்கும் இடங்கள் நாகர்கோவில் வட்டார வழக்கில் ‘கலுங்கு’ என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் ஏற்ப வேறு வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிறது, ஆனால்; அப்பகுதி சுமந்து நிற்கும் கதைகள் பலநூறு. இந்த நாவலின் ஆசிரியர் மீரான் மைதீன் தனது ‘கலுங்குப் பட்டாளம்’ நாவலின் வழியே அப்படியான கதை மாந்தர்களைப் பற்றி தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடனும் காதல் கனிரசத்துடனும் வாசகர்களை வளைத்துப் போடுகிறார்.
கலுங்குப் பட்டாளம் - Product Reviews
No reviews available