கடல் (ஜான் பான்வில்)
கடல் (ஜான் பான்வில்)
ஜான் பான்வில் அவர்கள் எழுதியது. தமிழில்: ஜி.குப்புசாமி அவர்கள். புக்கர் பரிசு பெற்ற நாவலாகும். காலச்சுவடு கிளாசிக் வரிசையைச் சார்ந்தது.
துயரம் நினைவுகள் காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள்
கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்குத் திரும்பவும் வருகிறார். பிள்ளைய்பிராயக் கோடைக் காலததில் பார்த்த கிரேஸ் குடும்பத்தினரின் நினைவுகள் முதுமைப் பருவத்தில் அவருடைய தற்கால நிகழ்வுகளுடன் பின்னிப்பினைந்து இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. திருமதி.கிரேஸ் அவருடைய இரண்டு பிள்ளைகளான க்ளோயி க்ளோயர் ஆகியவர்களுக்கிடையில் மாக்ஸ்க்கு நேரும் உறவும் அதைத் தொடர்ந்து நிகழும் மன நகர்வுகளும் விரிவாகவும் நுட்பமாகவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன.
ஜான் பான்வில்லின் நாவல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டப்படும் கடல் நாவலின் தமிழாக்கம் இது
கடல் (ஜான் பான்வில்) - Product Reviews
No reviews available